சாதனா வழிகாட்டி
திட்டம்
SAADHANA MENTORSHIP 2022
Saadhana Mentorship 2022 aims to conduct a general session about university life that is relevant for all majors, and then talk a bit more about the specific programs available at NUS, especially the newer ones such as College of Humanities and Science (CHS) and College of Design and Environment (CDE). We also hope to inform them of the opportunities available at NUS so that they capitalize on them once they are here. We decided on these as our goals since we are able to provide JC2, NSFs, and Poly Year 3 students, with firsthand advice on what to expect in university and how it is different. By doing so, we hope that they will be at a better position to tackle the new challenges that they might face in university.
We hope to achieve our aims through various program segments that focusses on Academics, Application Processes, Housing and Campus Life in University. We have also consolidated an Information E- Booklet which includes the Financial aid process, School fees for the various courses, Overview of halls, residential colleges, and student residences, CCA details and Uni/RC hall life. The E-Booklet also includes brief comparison of academic policies, and course offerings that might differ between NUS and other local universities. We will also be interacting with them through a Telegram group. The group provides the students with a platform to ask any questions regarding life in NUS and for us to directly address them.

Saadhana 2022 Sign-Up Form:
bit.ly/saadhana22
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், முழுநேர தேசிய சேவையாளர்கள் தொழில்நுட்ப கல்வி நிலைய மாணவர்கள் போன்றவர்களை பல்கலைக்கழக கல்விக்கு ஆயத்தப்படுத்துவதையே சாதனா 2022-இன் நோக்கமாக கொண்டுள்ளது. தொடக்கக் கல்லூரி அல்லது பல்துறைக் கல்லூரி முடித்த மாணவர்களுக்கு, மற்றும் முழுநேர தேசிய சேவையாளர்களுக்கு பல்கலைக்கழகத்தில் எதை எதிர்பார்க்கலாம் மற்றும் எத்தகைய வேறுபாடுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் போன்ற ஐயங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதையே எங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். அதன் மூலம், அவர்கள் பல்கலைக்கழகத்தில் எதிர்கொள்ளக்கூடிய புதிய சவால்களைச் சமாளிக்க அவர்கள் சிறந்த நிலையில் இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வனைத்தையும் உள்ளடக்கிய ஒரு மின்-தொகுப்பின் மூலம் எங்கள் இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறோம். NUS-இல் ஒரு கல்வி தவணையில் என்ன எதிர்பார்க்கலாம் மற்றும் அதில் உள்ள வெவ்வேறு பகுதிகளை எவ்வாறு அணுக வேண்டும் என குறிப்பிட்டுள்ளோம். பாட உதவிக்குறிப்புகள், குடியிருப்பு வாழ்க்கை, இணைப்பாட நடவடிக்கைகள் போன்ற பலவற்றைப் பற்றி முன்னாள் மாணவர்களிடமிருந்து நேரடியான ஆலோசனையும் இத்தொகுப்பில் காணலாம். நாங்கள் மாணவர்களுடன் டெலிகிராம் மூலமாகவும் தொடர்புகொள்வோம். இச்செயலி மாணவர்களுக்கு NUS-இல் கல்லூரி வாழ்க்கை குறித்து ஏதேனும் கேள்விகளைக் கேட்க ஒரு தளமாக அமையும். மேலும் இதன் வழியாக நாங்கள் அவர்களுடன் நேரடியாக கலந்துரையாட இயலும்.